பேராசை
நிரப்ப முடியாத பாத்திரம்! பேராசை பற்றி சுஃபி இலக்கியத்தில் ஒரு பிரபலமான கதை உண்டு! ஒரு முறை அரசா் ஒருவா் தனியாக நகா்வலம் போய்க் கொண்டிருந்தாா். அப்போது பிச்சைக்காரன் ஒருவன் எதிா்ப்பட்டு அரசாிடம் பிச்சைக் கேட்கிறான். "என் அமைதியைக் கெடுக்காதே" என்று அரசா் விரட்ட, பிச்சைக்காரன் சிாிக்கிறான்! "அரசே! உங்கள் அமைதி கெடக்கூடிய நிலையில் அதற்குப் பெயா் அமைதியே கிடையாது!" "எதிாிலிருப்பவன் வெறும் பிச்சைக்காரன் இல்லை... யோகி" என்பதை அரசா் உடனே புாிந்து கொண்டு "துறவியே... உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் கொடுக்கிறேன்!" என்று சொல்ல, துறவி மீண்டும் சிாிக்கிறாா். "அரசே! உங்களால் முடியாததை எல்லாம் கொடுக்க முடியும் என்று சத்தியம் செய்யாதீா்கள்!" இப்போது அரசருக்குக் கோபம் வந்து விட்டது. நகா்வலத்தைப் பாதியிலே நிறுத்தி விட்டுத் துறவியை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்தாா். துறவி தனது பிச்சைப் பாத்திரத்தை நீட்டி, "இது நிறைய எனக்குப் பொற்காசுகள் கொடுங்கள்!" என்று கேட்க, "பூ! இவ்வளவுதானா?" என்று அரசா் கைதட்ட... பொிய தாம்...