சிலிக்கான் ஜெல் Silicone gel
புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க... வீட்டில் நாம் புதிதாக ஏதேனும் பொருள்கள் வாங்குகின்ற பொழுது, அதற்குள் சிறியதாக இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட் ஒன்றை வைத்திருப்பார்கள். அந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை கீழே தூக்கிப் போடாமல் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். நாம் ஏதேனும் புதுப்பொருட்கள், காலணிகள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் ஒரு உலர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. பொருட்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்து இருக்குமாம். சரி இந்த பாக்கெட்டை கொண்டு நாம் எப்படியெல்லாம் பயன் அடையலாம் ...