Posts

Pi Crypto currency

https://support.help.minepi.com/servicedesk/customer/user/login?destination=user%2Fprofile To The CT Pi Network Please allow us to set our own password biometric type and message based approval of  payments. Your 24 words passphrase - none can type so they copy paste from a private place in the mobile. But A I experts have unearthed my & many pioneers passphrase and stolen all the 6 years of mined migrated Pi. The operation is well recoded in web. Having lost I attempted created new wallet. Now neither of wallets open. I just keep mining with a hope of better security in near future. My user name hosurhg E mail  hosurhg@gmail.com Wallet id: GBS4YASSVS3CH6YUCV77ECQN34H2IWTEEASJMD3SUK4GPTZ2YO534FX7 Ph: +91 7904956928 Gopalakrishnan H B-18-1st floor-TVS Nagar Hosur 635110 INDIA Wallet address  GBS4YASSVS3CH6YUCV77ECQN34H2IWTEEASJMD3SUK4GPTZ2YO534FX7 Here’s a current list of verified official contact & support channels for Pi Network. Use these — and only these — when...

மழை

Image
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை. 4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும். மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார். கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக்கு அணி. (குறள் 701)   ஆட்டுக்கல்   அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல.. அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து  அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர். மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக...

மைசூர்பா Mysorepa

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தயாரித்து விற்கப்படும் ஒரு ஸ்வீட் மைசூர்ப்பாகு. இதற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற கேள்விக்கு, பலரின் பதில் இல்லை ' என்பதாகவே இருக்கும். ஆனால், இந்த ஸ்வீட் பிறந்த இடம் மைசூர் மன்னரின் அரண்மனை என்றளவில் மிக நெருங்கிய சம்பந்தமிருக்கிறது. | 1884 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா, கிருஷ்ணராஜா உடையார் தேர்ந்த ரசிகர். இசை, நடனம், இலக்கியம் போன்ற வற்றில் இருப்பது போலவே நல்ல உணவின் ரசிகர். அம்பா விலாஸ் அரண்மனை யில் பூஜைகளுக்கு நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தனிச் சமையல் அறை, ஐரோப்பிய நண்பர்களுக்கு விருந்து தயாரிக்கத் தனிச் சமையல் அறை, மன்னரின் ராஜபோஜனம் தயாரிக்கத் தனி அறை என்று ஒரு சமையல் வளாகமே இருந்திருக் கிறது. ஒரு நாள் மன்னர் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் மதிய உணவுக்கு வந்து விட்டார். அவருக்குத் தினமும் உணவின் கடைசி அயிட்டம் அன்று செய்த சூடான ஸ்வீட்டாக இருக்க வேண்டும். அரண்மனையின் தலைமைச் சமையல்காரரான காக்கசுரா மடப்பா, அன்று அவசர அவசரமாக ராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, திட்டமிடாததால் ஸ்வீட் ...

கொல்லி / சதுரகிரி மலை Kolli hills

இயற்கை அளித்த கொடைகள்- தினம் ஒரு தகவல். கொல்லிமலை         Kolli hills இயற்கை வளம் மிக்க கொல்லிமலை,கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாகும்.மிதமான வெப்பம்,மக்கள்நெரிசலற்ற சுற்றுச்சூழல் மாசுபடாத தன்மை காரணமாக இன்றும் பசுமை போர்த்தியுள்ள இடங்களில் கொல்லிமலையும் ஒன்று.  நாமக்கல்லில் இருந்து 55 கி.மீ தொலைவிலும் கடல் மட்டத்தில் இருந்து 1000 முதல் 1600 மீட்டர் உயரமும் உள்ள இம்மலை சுமார் 400 ச.கி. பரப்பளவு கொண்டது.  ஆத்தூர் வட்டத்துக் கொல்லி மலையிலுள்ள மிக உயர்ந்த சிகரம் வேடக்கார மலையாகும். அதன் உயரம் 4,663 அடி ஆகும். கொல்லும் கொடிய நோய்கள் நிறைந்தும், அத்தகைய கொடிய நோய்களையும் கொல்லும் அற்புத மூலிகைகள் கொண்டும் அழகுற விளங்குகிறது கொல்லி மலை. இம்மலைக் காடுகளில் நிலவிய கடுமையான சூழலின் காரணமாக, இம்மலைப் பிரதேசத்துக்கு கொல்லி மலை என்ற பெயர் வந்தது. கொல்லி எனப்படும் வானளாவிய மரங்களை உடையதாலும், மும்மலங்களையும் முனைப்பையும் கொல்வதாலும் இம்மலை கொல்லிமலை எனப்பட்டது என்றும் சொல்லுவதுண்டு. நான்கு புறமும் சதுர வடிவில் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளதால் இது சதுரகிரி எனவும்...

ஆடி அமாவாசை

நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம். எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும். வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும். சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற...

செல்வம் பெருகி நிலைக்க

 செல்வம் பெருகி நிலைக்க சித்தர்களால் எழுதப்பட்ட  தந்திர நூல்களில் சொல்லப்பட்ட ரகசியங்கள்.: 1. இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ  அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும். 2. பசுமையான வெற்றிலை ஒன்றை எந்த நல்ல காரியங்கள், பணசம்பந்தமான காரியங்கள் போன்றவற்றிக்கு செல்லும் போதும் உடன் வைத்துக்கொள்ளவும்.  3. நிலக்கரி தனாகர்ஷண ஷக்தி உடையது அதனை ஒரு சிறு துண்டு எப்போதும் உடன் வைத்துக்கொள்ளவும். 4. ரூபாய்த்தாளை எப்பொழுதும் சுருளாக கட்டியே பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும். ( சுழற்சி சக்தி உண்டாகி செல்வமானது பெருகி தங்கும் ). 5. தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி - அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும். 6. முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை "ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்" என ஆறு முறை உச்சரித்து உடன் வை...

சிலிக்கான் ஜெல் Silicone gel

Image
  புதுசா எதாவது வாங்கும்போது உள்ள இருக்கற சிலிக்கா ஜெல் பாக்கெட்டை தூக்கி போடாதீங்க... வீட்டில் நாம் புதிதாக ஏதேனும் பொருள்கள் வாங்குகின்ற பொழுது, அதற்குள் சிறியதாக இந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட் ஒன்றை வைத்திருப்பார்கள். அந்த சிலிக்கான் ஜெல் பாக்கெட்டை கீழே தூக்கிப் போடாமல் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.   நாம் ஏதேனும் புதுப்பொருட்கள், காலணிகள், டிரஸ், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இவையெல்லாம் வாங்கினால் அதனுள் சின்னதா ஒரு பாக்கெட் வைத்து இருப்பார்கள். அது தான் சிலிக்கா பாக்கெட். அதில் குழந்தைகள் கையில் படாமல் அப்புறப்படுத்தவும் என்று எழுதியிருக்கும். நாமும் அது எதற்கு என்று தெரியாமலே தூக்கி குப்பையில் போட்டு விடுவோம். இவற்றில் இருக்கும் நன்மைகளை நீங்கள் அறிந்தால் அதை கீழே போட மனசு இருக்காது. தம்மா துண்டு பாக்கெட்டுக்குள் அவ்வளவு நன்மைகள் இருக்காம் . இந்த சிலிக்கான் பாக்கெட்டுகள் ஒரு உலர்விப்பான் மாதிரி செயல்படுகிறது. பொருட்களில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி பொருட்களை எப்பொழுதும் ப்ரஷ்ஷாக வைத்து இருக்குமாம். சரி இந்த பாக்கெட்டை கொண்டு நாம் எப்படியெல்லாம் பயன் அடையலாம் ...