Posts

Showing posts from July, 2021

வேங்கை மரம் Vengai Maram

 அருகிவரும் குழந்தைகளுக்கு வேங்கைப் பால் திருஷ்டி பொட்டு வைக்கும் வழக்கம்! சேலம் மாவட்டம் பேளூர் அருள்மிகு தான்தோன்றிநாதர் திருக்கோயில் ஆடிப் பதினெட்டு விழாவினை முன்னிட்டு சேவார்த்திகளின் கூட்டம் அலைமோதும்.அப்பொழுது பல்வேறு பொருள்களை விற்கும் அங்காடிகள் நூற்றுக்கணக்கில் காணப்படும். அவ்வங்காடிகளில்,குழந்தைகளுக்குத் திருஷ்டிப் பொட்டாக வைக்க உதவும் வேங்கைப் பால் சிரட்டைகளை, விற்பனைக்குக் கல்வராயன் மலை  மலைவாழ்  மக்களான மலையாளிகள் [ மலையில் வாழ்பவர்கள் என்று பொருள்;தமிழ் பேசுகிற பழங்குடியினர்]கொண்டுவருவார்கள்.இவ்வாண்டு ஒரேவொரு அங்காடியில் தான் வேங்கைப்  பால்  சிரட்டைகளைக் காண முடிந்தது.  இதனைப் பற்றி கேட்டதற்கு,'' வேங்கை மரங்களை  முன்பு போல் காணமுடிவதில்லை;அருகிவிட்டன;இனி வருங்காலத்தில் காடுகளில் வேங்கைமரங்கள் இருக்குமோ இருக்காதோ ''என்று பதில் கிடைத்தது.  வேங்கை   மரத்தின் சிவப்பு நிற பிசின் உலர்ந்ததும் கருப்பாகி விடும். இந்த பிசினை குழந்தைகளுக்குத் திருஷ்டி பொட்டாக வைப்பர்.  '' வேங்கை மரத்துப்  பிசின் குழந்தைகளுக்குத் திருஷ்டி போக...

படவேடு ரேணுகாம்பாள் Arulmigu Devi Renugambal

வாழ்க நலத்துடன் Arulmigu Devi Renugambal சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள் தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன். Reṇukā, also referred to as Renuga and Renu, is a Hindu goddess worshipped predominantly in Karnataka,  Maharashtra and southern Indian states of, Tamil Nadu, Telangana, and Andhra Pradesh. Ancient Renuka Yellamma Devi temple at Savadatti is one among the prominent shakthi peetas in Karnataka, Renuka's temple at Mahur in Maharashtra is one of the shakti peethas. தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி  பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன். பெண் தெய்வத் திருத்தலங்களில் முக்கியமான இத்திருக்கோயிலில் அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன்...

64 கலைகள் 64 Arts

 64 கலைகள் இருப்பதாக நாம்  அறிவோம். அவைகளை விளக்கமாக காண்போம் 1)  எழுத்திலக்கணம்     மொழியை வரி வடிவம் செய்தல்-     அ, இ, உ, எ, ஒ, ஒள இதுவே உயிரின் வரி வடிவம். 2) இயாப்பு இலக்கணம்           எழுதும் போது காற்புள்ளி,அரைபுள்ளி, கேள்விக் குறி ,ஆச்சரிய குறி இட்டு எழுதுவது. 3) கணிதம்     கணித்தல் (கூட்டல் ,கழித்தல், பெருக்கல்....)     மொழியை அளத்தல்(மாத்திரை) 4) மறை   ஐந்து வகை மறைகள். உயிர், மெய், உயிர்மெய், ஆயுதம், பிரணவம்(குருவின் மூலம் அறிதல்) 5) புராணம்     புராணம் - வரலாறு. இது பதினெட்டு வகைப் படும். அவைகள்     சைவம்,வைணவம் ,பிரம்மம் ,பதுமம், பாகவதம், நாரதீயம்,மார்கண்டேயம் ,ஆக்னேயம் ,பவிடியம், வராகம் ,கூர்மம் ,வாவியம் காருடம், வாமணம் ,இலிங்கம், மச்சம், காந்தம், பிரம்மம் ,வர்த்தம் என்பன. 6) வியாகரணம்     மொழி இலக்கணம் (பேசுவது) 7) சோதிடம்         சூரியனை மையப்படுத்தி கோள்களை கணித்தல் 8) நீதி சாத்திரம்     உண்மையை பேசுவது 9) இயோக சாத்திரம் ...