படவேடு ரேணுகாம்பாள் Arulmigu Devi Renugambal
வாழ்க நலத்துடன்
Arulmigu Devi Renugambal
சிரசு வடிவில் அருள்பாலிக்கும் படவேடு ரேணுகாம்பாள்
தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன்.
Reṇukā, also referred to as Renuga and Renu, is a Hindu goddess worshipped predominantly in Karnataka, Maharashtra and southern Indian states of, Tamil Nadu, Telangana, and Andhra Pradesh. Ancient Renuka Yellamma Devi temple at Savadatti is one among the prominent shakthi peetas in Karnataka, Renuka's temple at Mahur in Maharashtra is one of the shakti peethas.
தமிழகத்தில் அமைந்துள்ள சக்தி பீடங்களில் முக்கியமானது படவேட்டம்மன் திருக்கோயில். தன்னை நாடி வரும் பக்தர்களின் கோரிக்கைகளை தாயன்புடன் செவி சாய்த்து அதை நிறைவேற்றித் தரும் கருணைத் தாயே படவேட்டம்மன். பெண் தெய்வத் திருத்தலங்களில் முக்கியமான இத்திருக்கோயிலில் அம்மன் (சிரசு மட்டும்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் உடன் கொண்டு பேருருவாக காட்சியளிக்கிறார்.
அத்தி மரத்தால் ஆன அம்மனின் முழு உருவமும், அதன் கீழ் சுயம்புவாக தோன்றிய அம்மனும், அம்மனின் இடப்பக்கம் ரேணுகாதேவியின் சிரசும் உள்ளது. பரசுராமரின் உருவமும் கருவறையில் உள்ளது.
ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த பாணலிங்கமும், சிலா சிரசும், சுதையினாலான அம்மன் முழு திருவுருவமும் கருவறையில் அமைந்துள்ளது. மற்ற அம்மன் கோயில்களில் குங்குமம்தான் பிரசாதமாக வழங்கப்படும். இங்கு சற்று தொலைவில் உள்ள ஜமதக்னி முனிவர் வாழ்ந்ததாக கருதப்படும் ஆசிரமத்தில் யாகம் செய்த இடத்தில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மண் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
கேட்ட வரம் தரும் ரேணுகாம்பாள் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படவேட்டில் அமைந்துள்ளது சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கூறப்படும் இக்கோயிலில் மூலவராக நமக்கெல்லாம் அருள் பாலித்து வருகிறாள் அன்னை ரேணுகாம்பாள்.
அன்னை ரேணுகாம்பாள் திருக்கோயில் மகிமை
திருமணம், குழந்தை வரம் வேண்டியும் பக்தர்கள் வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம், குழந்தை பேறு கிடைக்கும். எந்த வகை நோயாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் உடனே குணமாகிறது எனப் பரவசப்படுகின்றனர் பக்தர்கள்.
அன்னைக்கு நன்றிக்கடன்
பிரார்த்தனைகள் நிறைவேறிய மகிழ்ச்சியில் அன்னைக்கு நன்றிக்கடனாக பக்தர்கள் எடைக்கு எடை நாணயம் செலுத்துகின்றனர். நெய் தீபம் ஏற்றுதல், சிலைக்கு கண்ணடக்கம், உருவ பொம்மைகள், புடவை போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
படவேடு சென்று அன்னை ரேணுகாம்பாளை தரிசிக்க நம்மை பீடித்திருக்கும் பில்லி, சூனியம், நோய் நொடிகள் உள்ளிட்ட அனைத்து பிணிகளும் நீங்கிடும். வளமான வசந்தம் வீசும் வாழ்க்கைக்கு தனது அருளை அள்ளித் தருகிறாள் அன்னை படவேடு ரேணுகாம்பாள்.
https://youtu.be/qVYeUKPDOnM
https://youtu.be/ZCOT07apibg
https://youtu.be/lCvLXbnqZ3o
https://youtu.be/MhrYly6ch1g
Comments
Post a Comment