மைசூர்பா Mysorepa
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தயாரித்து விற்கப்படும் ஒரு ஸ்வீட் மைசூர்ப்பாகு. இதற்கும் மைசூருக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்ற கேள்விக்கு, பலரின் பதில் இல்லை ' என்பதாகவே இருக்கும். ஆனால், இந்த ஸ்வீட் பிறந்த இடம் மைசூர் மன்னரின் அரண்மனை என்றளவில் மிக நெருங்கிய சம்பந்தமிருக்கிறது. | 1884 முதல் 1940 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த மைசூர் மகாராஜா, கிருஷ்ணராஜா உடையார் தேர்ந்த ரசிகர். இசை, நடனம், இலக்கியம் போன்ற வற்றில் இருப்பது போலவே நல்ல உணவின் ரசிகர். அம்பா விலாஸ் அரண்மனை யில் பூஜைகளுக்கு நைவேத்தியம், பிரசாதம் தயாரிக்கத் தனிச் சமையல் அறை, ஐரோப்பிய நண்பர்களுக்கு விருந்து தயாரிக்கத் தனிச் சமையல் அறை, மன்னரின் ராஜபோஜனம் தயாரிக்கத் தனி அறை என்று ஒரு சமையல் வளாகமே இருந்திருக் கிறது. ஒரு நாள் மன்னர் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் மதிய உணவுக்கு வந்து விட்டார். அவருக்குத் தினமும் உணவின் கடைசி அயிட்டம் அன்று செய்த சூடான ஸ்வீட்டாக இருக்க வேண்டும். அரண்மனையின் தலைமைச் சமையல்காரரான காக்கசுரா மடப்பா, அன்று அவசர அவசரமாக ராஜாவுக்கான மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, திட்டமிடாததால் ஸ்வீட் ...