நட்புக்கு கர்ணன் True friend

"சபாஷ் கர்ணா"
நட்புக்கு இலக்கணம் கர்ணன்

கர்ணன் ஓர் ஒப்பற்ற வீரன்
சூரியனின் புத்திரன்
குந்தியின் மூத்த மைந்தன்
கொடையில் சிறந்தவன்
நட்பு எனும் இலக்கணத்தின் அடையாளம் இவன்
இன்னும் எம்மவர்களிடையே மகாபாரத போரில் அர்ஜூனன் கர்ணனை விட பல சாலி என நினைத்துக்கொள்கின்றவர்கள் இருக்கின்றனர்.
அதாவது பகவான் கிருஷ்ணன் தனது முழு திறமையும் ,பல சாபங்களையும், தந்திரமாக கர்ணனிடம் பெற்ற வரங்கள்,கொடைகள். சூழ்ச்சிகளை கையாண்டு கர்ணனின் தாயான குந்தியை பயன்படுத்தியே பாண்டவர்களை வெற்றி அடைய செய்தார் இது யாவரும் அறிந்ததே
போரில் பத்தாம் நாள் வரை  கௌரவ படை பின்னடைவையும் பாரிய இழப்புகளையும் சந்தித்து இருந்தது. கௌரவர்களின் நாயகன் அதாவது நம்பிக்கை நட்சத்திரம் என்று கூட கூறலாம். கங்கையின் மைந்தன் பீஷ்மர் கூட  அர்ச்சுனன்அம்பு பட்டு இறக்கும் தருவாயில் போரை பார்த்து போர்களத்திலே அம்பு படுக்கையில் படுக்கையில் காயம்பட்டுக்கிடந்தார்.

பத்தாம் நாள் இரவு கௌரவபடைகள் சஞ்சலம் ஏதும் இல்லாத ஏக்கம் அனைவருக்கும் கெளரவர்களை காப்பாற்ற யாரும் இல்லை.  
அர்ஜுனனின் பாணங்கள்,வீமனின் கதாயுதம்,நகுலன் மற்றும் சகாதேவனின் வாள்வீச்சு என்பன கெளரவபடைகளின் கண்முன்னே. ஏன் எனில் அவ்வளவு அடி வாங்கி விட்டனர். திரும்பிய இடமெல்லாம் கெளரவபடை மண்ணை கவ்வியது.
கௌரவபடைகள் குறுகிபோயினர் தோல்வி எனும் நிலையில் அவர்களின் படை தளர்ந்து சோர்ந்து போயினர். பத்தாம் நாள் இரவு கௌரவ படை கூடாரத்தில் துரியோதனன் ஓர் அவசரக்கூட்டம் அனைத்து தளபதிகளும் ஒன்று கூடினர்.கர்ணன்ன உட்பட
ஓர் வீரமிக்க தலமையும் பாண்டவர்களின் வியூகங்களை உடைக்கும் ஆற்றலும் பாண்டவர்களுக்கு இணையாக புது வியூகத்தை அமைக்கும்  ஆற்றலும்
பாண்டவர் படைகளின் முன்னேறலை உடைத்தெறியும் வீரமும் யாரிடமும் இல்லை கர்ணன் ஒருவனைத்தவிர என்பதை கெளரவபடை புரியத்தொடங்கியது. அதுவரை கர்ணனை குறைத்து மதிப்பிட்ட அனைவரும் கர்ணன் பக்கம் தலையை திருப்பினர்.
அந்த இராத்திரி கூட பாண்டவர் கூடாரங்களில் படைகள் ஆரவாரம்.
ஆரவார சத்தத்தில் மனம் குமறினான் துரியோதனன்.
நண்பனின் கலக்கத்தை கண்ட கர்ணன் வெகுண்டான்.
பாண்டவர்களின் கூடாரங்கள் வெற்றிக்களிப்பில் .மெல்ல மெல்ல இரவின் நீளம் குறைந்து சந்திரன் மறைந்து கதிரவன் தோன்ற
குருசேத்திர போரின் பதினோராம் நாள்
போருக்கு இரு தரப்பும் அணிவகுத்து நின்றனர்.
அவ் அணிவகுப்பு ஓர் சரித்திர நிகழ்வு. கதிரவன் தனது மகனாகிய கர்ணனின் வீரத்தைக்காண ஆகாயத்தில் தயாராக நின்றான்.

எதிர் எதிரே நின்ற படைகளின் கௌரவபடைகள் தளர்வு நிலையில் காணப்பட்டது. 
பாண்டவர் பக்கம் அர்ஜுனனின் தேரில் சாரதியாக இருந்த கிருஷ்ணரோ இன்றைக்கு  கௌளரவ படைக்கு யார் ?தலமை தாங்குவார்கள் என சிந்திக்கும் சிந்தித்த படி அர்ஜுனனினை பார்த்து ஓர் புன் சிரிப்பு
சிரிப்பின் உள் நோக்கம் புரியாத 
அர்ஜுனன் சற்று குழம்பி போக அர்ஜுனனை பார்த்து
"அர்ஜுனா வில்லை நாணேற்றி தயாராக எதற்கும் வைத்துக்கொள் இன்று உன் இலக்கில் மட்டும் கவனம் செலுத்து. இலக்கில் இருந்து கண்ணை எடுத்து விடாதே பின் நீ இலக்காய் ஆகி விடுவாய். "என்றார்.

"என்ன ?கிருஷ்ணா ஏன் இப்படி என்றும் இல்லாதவாறு கூறுகிறாய்"

"அர்ஜுனா கலங்காதே நான் இருக்கிறேன்." இன்று உன் தம்பியான வீமனையும் நகுலனையும் முன் செல்லவிட்டு உன் ரதம் அவர்களை பின் தொடரட்டும். என்றார்.

ஏன் மாயவா இவ்வாறு கூறுகிறாய் என் தம்பிகளுக்கு பின்னால் நான் எப்படி செல்வேன். நான் அல்லவா முன் செல்ல வேண்டும் .நான் அல்லவா வில் வைத்துள்ளேன். இது தர்மம் இல்லையே?
அர்ஜுனா இன்று உன் தம்பிகள் இலக்கு அல்ல. இன்று நீ தான் நீ மட்டுமே இலக்கு இன்று மட்டும் அவ்வாறு செய் மற்றவற்றை நான் பார்த்து கொள்கின்றேன். என்று வானத்தை பார்த்து கதிரவனை கை காட்டினார்.
கதிரவனை பார்த்து இது  என்ன கிருஷ்ணா இன்று கதிரவனின் கனல் கடுமையாக காணப்படுகிறதே கண் துடைத்த படி சம்மதிக்கின்றான் அர்ஜுனன்.கூறியது பகவான் அல்லவா.
மறுமுனையில்

தளர்வு நிலையில் நின்ற கெளரவ படைகள் மெல்ல கூக்குரலிடுகின்றனர்.
கூக்குரல் வந்த பக்கம் திரும்புகிறார் கிருஷ்ணர்
 கிருஷ்ணரின் பார்வை தலமையேற்று அந்த மாவீரனின் மேல் விழுந்தது.
ஆம் கிருஷ்ணனின்  யூகம் சரி அவர் நினைத்தது தான்
பகலவனின் புத்திரனும் பரசுராமனின் திறமை வாய்ந்த சீடனும் கொடையில் சிறந்தவனுமான கர்ணன் தனது தேரில்  போர்க்களம் புகுந்தான்.அவனது கண்ணில் ஆவேசம்
அவனின் வருகையை கண்ட கௌரவபடைகள் ஆரவாரம் செய்தனர்.
ஓவ்வொரு கௌரவ படை வீரர்கள் மனதிலும் புது வேகம் தலமை ஏற்பது சூரியனின் புத்திரனல்லவா
இரு தரப்பின் சம்மத்துடன் கிருஷ்ணன் சங்கை முழக்கினார்.
போர் தொடங்கிற்று.

இரு தரப்பும் போர் செய்ய தொடங்கினர்.
கண்ணில் படும் பாண்டவபடைகள் யாவும் கர்ணனின் அம்பால் கருகி போயினர்.
பாண்டவரின் ஆற்றல் யாவும் கர்ணன் முன் மண்டியிட்டது. அவர்களது சேனைகள் 
குதிரைப்படை என்பன கர்ணனால்  நொருக்கப்பட்டது.  கண்ணில் படுபர்கள் அனைவரையும் கொன்று குவித்து கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தான் கர்ணன்.
ஓரிடத்தில்
கர்ணனின் ரதம் முன் குதித்தான். வீமன் .
கர்ணனை தன்னோடு சண்டை செய்யுமாறு அழைப்பு விடுத்தான்.  ரதத்தில் இருந்த கதாயுதத்தை தூக்ககி கொண்டு வீமன் மேல் பாய்ந்தான் கர்ணன்.
ஆவேசமான போர் வீமனின் திறமை யாவும் கர்ணன் முன் மட்டியிட்டன.
வீமனால் கர்ணனை சமாளிக்கமுடியவில்லை
இவற்றை சற்று தொலைவில் ரதத்தில் பார்த்து கொண்டிருந்த அர்ஜீனன் . கிருஷ்ணா ரதத்தை கர்ணனிடம் கொண்டு செல் வீமன் மடிவதுக்கு முன் அவனை காக்க வேண்டும். என்றான்.

அர்ஜுனா கலங்காதே சகோதர பாசத்தை விடு இன்று வீமன் மடிய மாட்டான் கர்ணனால் அவனை கொல்ல முடியாது.
என்ன கிருஷ்ணா கூறுகிறாய்
"சற்று காத்திரு அர்ஜீனா"
 மறுபக்கம் கீழே மண்டியிட்டு விழுந்த வீமனின் தலையை குறி பார்த்து தனது கதாயுதத்தை ஓங்கினான் கர்ணன்.
"குந்திக்கு செய்த சத்தியம் ஞாபகம் வர "
வீமா உன் தாய் செய்த புண்ணியத்தால் நீ தப்பி விட்டாய் எழும்பி ஓடு இன்று நான் கொல்லப்போவது பேடி அர்ஜுனனை.
என்று ரதத்தில் ஏறி முன்னேறி சென்றான் கர்ணன். சிறிது தூரத்தில் சகாதேவனும்,நகுலனும் கர்ணனை போருக்கு அழைத்தனர். 
மறுப்பானா கர்ணன் குதித்தான் மறுபடியும் வீமனின் நிலையே இருவருக்கும். கொல்லவில்லை அவர்களையும். காரணம் குந்தியின் வரம்.
ரதத்தில் ஏறி முன்னேறினான்
போகும் வழியாவும் பாண்டவ படையை மண்ணை கவ்வ வைத்தான்.
கர்ணனின் கடுமையான தாக்குதலைக்கண்ட கௌரவ படை தளபதிகளும் சிற்றரசர்களும் பாண்டவர்களை பலமாக தாக்க தொடங்கினர். கௌரவபடைகள் அனைவருக்கும் அன்று கதாநாயகனாக கர்ணன் காணப்பட்டான்.

அவனுடைய வேகம் விவேகமும் படைவீரர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. கௌரவ படைகளின் கை ஓங்கத் தொடங்கின். ஆனால் மறுபக்கம் கிருஷ்ணன் சாதுவாக ரதத்தை செலுத்தி கொண்டு இருந்தார்.
ஆனால் கர்ணனோ
பாணடவர்களின் வீயுகங்கள் யாவும் உடைத்தெறிந்து கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தான் .
அவனது கண் பட்ட இடமெல்லாம் பாண்டவர் படை மாண்டது. கர்ணனைக்கண்டு மிரண்டனர்
கர்ணனின் தலமையினைக் கொண்ட கௌரவபடையோ சிறப்பான ஆக்ரோசத்துடன்  பலமாக திருப்பி அடிக்கத்தொடங்கியது. கர்ணனை அர்ஜூனன் பக்கம் நெருங்க விடக்கூடாது 
கர்ணனை நெருங்க விட்டால் அர்ஜூனன் மடிவான் என்பதை உணர்ந்த கிருஷ்ணன் தேரை கர்ணன் பக்கம் செல்லாது வேறு பக்கமாக கௌரவ படைகளுடன் அர்ஜூனனை போரிட வைத்தார்.
அர்ஜூனனும் சளைத்தவன் அல்ல.
வில்லுக்கோர் விஐயன் அல்லவா?
அர்ஜூனன் தனியாகவே கௌரவ படையை சிதறடித்தான். கௌரவப்படைகளின் சில தளபதிகளை கொன்றான்.

மறுபக்கமோ கர்ணன் பாண்டவர் படைகளை துவம்சம் செய்துகொண்டிருந்தான்.
கர்ணனின் தேரைக்கண்டவுடனே பாண்டவர் படை சிதறி ஓடத்தொடங்கியது பாண்டவர்கள் மெல்ல மெல்ல பின்வாங்க ஆரம்பித்தனர். கர்ணனின் வில் வீச்சும் அவனது வாள் வீச்சும் தேவர்களைக்கூட கலங்கடித்தது.
அந்த நாள் கர்ணன் அடித்த அடி பாண்டவர்களையும் அவர்களின் படையையும் மிரள வைத்தது.
கிருஷ்ணன் இல்லாவிடின் அர்ஜூனனின் ஆயுள் முடிந்து இருக்கும் என்றே கூற வேண்டும்
பாண்டவர் படை மிரண்டு ஓடுவதை கவனித்த கிருஷ்ணர் இனியும் பொறுத்தால் முழு படையையும் கர்ணன் தனியாகவே அழித்து விடுவான்.  கர்ணனை அர்ஜூனனுடன் மோத விட்டால் கர்ணனால் கொல்லப்படும் பாண்டவர் படையை குறைக்க முடியும்  என்பதை யூகித்துக்கொண்டார்.
சற்று திரும்பி கொடியில் உள்ள அனுமானை திரும்பி பார்த்து ஓர் புன் சிரிப்புடன் ரதத்தை கர்ணனை நோக்கி செலுத்தினார்.
அர்ஜூனனின் ரதத்தை கர்ணனின் ரதத்தின் முன் நிறுத்தினார்.

கர்ணன் அர்ஜூனனும் மோதத் தொடங்கனர்.
கர்ணனும் அர்ஜூனனும் ஒருவர் மீது ஒருவர் அம்பு மழைகளை பொழிந்துகொண்டிருந்தனர். இவர்கள் இருவரின் ஆற்றலை கண்டு தேவர்கள் வியந்தனர். போரில் அர்ஜுனன் எய்த அனைத்து அம்புகளையும் கர்ணன் உடைத்தெறிந்தான். ஆனால் அர்ஜுனனும் சாதாரணமானவன் அல்ல ஆயிற்றே, தன் அஸ்திரங்களின் மூலம் கர்ணனை நிலைகுலைய செய்ய முயற்சி செய்தும் முடியவில்லை.  கர்ணனின் சில அம்புகளுக்கு அர்ஜுனனின் அம்பால் பதில் கூற முடியவில்லை 
கர்ணனை போர் செய்து கொல்லமுடியாது என்பதை முதலே உணர்ந்த கிருஷ்ணர் 
"அர்ஜுனா அவன் சாதாரணமானவன் அல்ல தேவர்களின் தலைவனான இந்திரனை நினைத்து அவன் ரதத்தை நோக்கி அம்பை செலுத்து அவனது ரதத்தை பின் நகர்தி கொண்டு இரு எப்படியும் சற்று நேரத்தில் பொழுதாகிவிடும். ரத்தை வில்லால் பின் நகர்த்து என்றார்."

 அர்ஜுனன் விடும் ஒவ்வொரு அம்பும் கர்ணனின் தேரை பின் தள்ளியது.
ரதம் பின் நகர்வதை எதிர்பார்க்காத கர்ணன் சவாலுக்கு சவாலாக அர்ஜூனனுடைய ரதத்தை பின் நகர்த்த தொடங்கினான்.
இருவரும் மாறி மாறி அம்பு மழை பொழிந்தனர்.
அர்ஜுனன் விடும் ஒவ்வொரு அம்பும் முப்பது அடி தூரம் தள்ளியது. 
அதே சமயம் கர்ணன் எய்த அம்புகள் அர்ஜுனனின் தேரை பத்து அடிகள் மட்டுமே தள்ளியது. 

அர்ஜுனன் கர்ணனின் ரதத்தை முப்பது அடி தூரம் நகர்த்திய போது அமைதி காத்த ஸ்ரீகிருஷ்ணர் கர்ணன் தங்கள் ரதத்தை பத்து அடி தள்ளியபோது கர்ணனை நோக்கி ரதத்தில் இருந்து  எழும்பி நின்று
 "சபாஷ் கர்ணா" என்று பாராட்டினார்.
இதை பார்த்த அர்ஜுனனுக்கு தன்னை புகழாமல் கர்ணனை ஏன் கிருஷ்ணர் ஏன் புகழ்கிறார் என்ற குழப்பம் ஏற்பட்டது.
பார்த்தனின் குழப்பத்தை அறிந்த நாராயணன், 

"அர்ஜுனா உன் மனகுழப்பம் எனக்கு நன்றாக புரிகிறது. நீ கர்ணனுடைய தேரினை முப்பது அடிகள் தள்ளினாய் ஆனால் கர்ணன் நமது தேரினை பத்து அடிகள் மட்டுமே தள்ளினான். 
இருந்தும் வில்லாற்றலில் அவனே சிறந்தவன் ஏனெனில் அவனது ரதத்தில் அவன் மட்டுமே இருக்கிறான் ஆனால் நமது ரதத்திலோ உன்னோடு நான் இருக்கிறேன் அது மட்டுமின்றி உன் சகோதரன் பீமன் ஆஞ்சநேயரிடம் இருந்து பெற்ற வரத்தின்படி உனது ரதத்தின் கொடியில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். எனவே அவரது பலமும் எனது பலமும் சேர்ந்து உன் ரதத்தை பாதுகாக்கிறது. இருப்பினும் கர்ணன் நமது ரத்தத்தை தள்ளுகிறான் என்றால் அவனின் வில்லாற்றல் பாராட்டுக்குரியதுதானே என்று கூறினார்".
இதனை கேட்ட அர்ஜுனனும் கர்ணனின் வீரத்தை பாராட்டினான்

இவ்வாறு பல சூட்சமங்களின் மத்தியிலும் பிரகாசமாய் தெரிந்தவன் கர்ணன்
கர்ணனைப்போல் நண்பனை தேர்ந்தெடு நீ செய்தது பிழை எனினும் நட்புக்காக உன் பக்கம் நிற்பான்
நட்புக்கு இலக்கணம் கர்ணன்
.

Comments

Popular posts from this blog

Pi Crypto currency

மழை

ஆடி அமாவாசை