தமிழும் தேனும்

தமிழுக்கு இனிமை என்றொரு பெயர் உண்டு. காரணம் ஏன் தெரியுமா?

*தேன்*

கொண்டு வந்தவனை பார்த்து நேற்று ஏன்

*தேன்*

கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவன் கூறிய இனிமை பொருந்திய பதில்..

ஐயா நீங்கள்  
கூறியதை நினைத்

*தேன்* !

கொல்லிமலைக்கு  நடந் *தேன்*!

பல இடங்களில் அலைந் *தேன்*!

  
ஓரிடத்தில் பார்த்  
*தேன்*!

உயரத்தில் பாறைத் *தேன்*!

எப்படி எடுப்பதென்று மலைத்  
*தேன்*!

கொம்பொன்று ஒடித் *தேன்*!

ஒருகொடியை பிடித்  
*தேன்* !

ஏறிச்சென்று கலைத்  
*தேன்*!

பாத்திரத்தில் பிழிந்  
*தேன்*!

வீட்டுக்கு வந்  
*தேன்*!

கொண்டு வந்ததை வடித் *தேன்*!

கண்டுநான் மகிழ்ந் *தேன்*!

ஆசையால் சிறிது குடித்  
*தேன்* !

மீண்டும் சுவைத் *தேன்* !

உள்ளம் களித் *தேன்*!

உடல் களைத் *தேன்* !

உடனே படுத் *தேன்*!

கண் அயர்ந் *தேன்*!

அதனால் மறந் *தேன்*!

காலையில் கண்விழித் *தேன்*!

அப்படியே எழுந் *தேன்*!

உங்களை நினைத் *தேன்*!

தேனை எடுத் *தேன்*!

அங்கிருந்து விரைந் *தேன்*!

வேகமாக நடந் *தேன்*!

இவ்விடம் சேர்ந் *தேன்*!

தங்கள் வீட்டை அடைந் *தேன்*!

உங்களிடம் கொடுத் *தேன்*!

என் பணியை முடித் *தேன்*!

என்றார் அதற்கு

*தேன்*

பெற்றவர்

தேனினும்

இனிமையாக உள்ளது உமது பதில். இதனால் தான் நம் முன்னோர்கள் தமிழை

தமிழ்த் *தேன்*

என்று உரைத்தனரோ? என கூறி மகிழ்ந் *தேன்*. என்றார். 💐

படித்ததில் ரசித் *தேன்*

சிந்தித் *தேன்*  
பகிர்ந் *தேன்*..!

Comments

Popular posts from this blog

Pi Crypto currency

மழை

ஆடி அமாவாசை