தமிழ்நாட்டு ரெட்டியார்கள் Reddys of Tamilnadu
ரெட்டிகள் - தமிழகமெங்கும்.
840 கூட்டமும், 320 குலங்களும் 36 பிரிவுகளும் கொண்ட ரெட்டிகள் தமிழகம் முழுவதிலும் வாழ்கின்றார்கள் என அரசாங்க குறிப்புகளிலும், "தட்சண ராஜ்ய சம்பூரண யாத்திரை" என்ற நூலில் பார்த்த சாரதி நாய்டுகாரும், "ரெட்ல கோத்தராலு" என்ற நூலில் கஸ்தூரி ரெட்டிகாரும் குறிப்பிடுகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளாக நான் தமிழகப் பகுதிகளில் உள்ள 5000 ஆயிரம் ரெட்டி ரெட்டி கிராமங்களில் 4300 கிராமங்கள் வரை நேரடியாகச் சென்று பார்த்தேன். ரெட்டி சமூக வைதீகப் பழக்கங்கள், மொழி, ஆசாரம் , இவை முழுமையாக எங்கும் இல்லை. கலப்பு நாகரீகம், கலாச்சாரமாகவே காணப்படுகின்றன. ஆந்திர எல்லை பகுதிகளாக இருந்து வரும் சேலம், தர்மபுரி, வட ஆர்க்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களில் குலாசாரங்கள் இருந்து வருகின்றன என்றாலும் அவற்றையும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது.
சென்னை முதல் திருவனந்தபுரம் வரை தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நீங்கலாக ரெட்டிகள் எல்லா மாவட்டங்களிலும் பரந்து வாழ்கின்றனர். எங்கு வாழ்ந்தாலும் இப்போது ரெட்டிகள் முழுதும் கெட்டுப்போகவில்லை. ஆனால் நாளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் கெட்டுப் போய்க்கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் எல்லா ரெட்டிகளிடமும் இருந்து வருகின்றது.
அவற்றிற்கு பிரதானமான மூன்று காரணங்கள்:
1. முழுதும் விவசாயத்தையே நம்பி இருப்பது.
2. நெருக்கடியான பொருளாதாரத்தை அடைந்தும் நமது ஆடம்பரங்களை சுருக்கி கொள்ள கற்றுக்கொள்ளவில்லை.
3. ரெட்டி என்ற பாச உணர்வுகளை நீக்கிக் கொண்டதால் ரெட்டிகளின் வளர்ச்சியில் பொறாமை கொண்டுள்ள இதர சமூகத்தினரின் ஆதிக்கத்திற்கு தம்மை அறியாமலேயே அடி பணிகிற நிலை.
இந்த அபாயகரமான தன்மைகளுக்கு "பெரிய குடும்பங்கள்" என்ற ரெட்டி முதலாளிகள் - நிலச்சுவான்தார்கள் எளிய ரெட்டிகளைப் பல இடங்களில் பணயம் வைத்திருக்கின்றனர்.
முகவையில் மேற்கு ராமநாதபுரம் பகுதியில் அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுக்காக்களில் கெண்டிக்கோட்டை அயோத்தி ரெட்டிகள் பெரும்பகுதி வாழ்கின்றனர்.
மதுரை மாவட்டத்தில் பெரியகுளம், நிலக்கோட்டை, மதுரை, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கெண்டிக்கோட்டை ரெட்டி, கொண்ட ரெட்டி, போகநாடு ரெட்டி, தேசூர் ரெட்டி, பசுபுலேட்டி ரெட்டி, பலிஜ ரெட்டி ஆகிய பிரிவினர் பெருமளவில் வசிக்கின்றனர்.
திருச்சியில் பொங்கலை நாட்டு ரெட்டி, மிட்டேட்டி பொங்கலவாரு, துரை ரெட்டிகள், பண்டமுதுருகாப்புகள், நாமதாரி ரெட்டிகள், கரூர், குளித்தலை, பெரம்பலூர், துறையூர், மணப்பாறை பகுதிகளில் வாழும் வாழும் இவர்களில் நாட்டார்கள் என்று அழைக்கப்படும் எஜமான் ரெட்டிகளும் உண்டு. இவர்களுக்குச்சமமான "பண்ணையார்கள்" என்ற எஜமான ரெட்டிகள் நெல்லை மாவட்டத்தில் உள்ளனர்.
இவர்கள் பெரு நிலச்சுவான்தார்கள். இந்த எஜமான ரெட்டிகளின் ஆதிக்க கொட்டைகள்தான் மிட்டாக்கள். இவை விஜயநகர ஆளுகையின்போது பாளையங்களாக அளிக்கப்பட்டன.
முகவையில் மூளிப்பட்டி, திருச்சியில் துறையூர், காட்டுப்புத்தூர், சேலத்தில் மின்னாம்பள்ளி, லாதிவாடி, எருமைப்பட்டி, முதுகாப்பட்டி, நல்லிபாளையம், பொட்டணம், அலங்காநத்தம், செங்கல்பட்டில் கயப்பாக்கம், பொலப்பாக்கம்,பூங்குணம் ஆகிய இடங்களிலும் பல மிட்டாக்கள் உண்டு.
இந்த பாளையப்பட்டு பண்ணையார்களான எஜமான ரெட்டிகள் தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்ள இதர ரெட்டிகளை தங்களின் ஏவலார்க்களாகப்பயன்படுத்திக் கொண்டு வசதியில் தனக்கு நிகராக இருக்கும் ரெட்டி சமூகத்தின் பகைவர்களை பாதுகாத்து வந்தார்கள். எனவே நீண்ட நாட்களுக்கு முன்னேயே சமூக ஐக்கியம் சிதைந்து விட்டது என்ற கருத்துக்கு இப்போதும் சில ஆதாரங்கள் உள்ளன.
தென் ஆற்காட்டில் தொழுதூர், கடலூர், திருக்கோயிலூர், திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி. பண்ருட்டி, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஒன்பது வகை ரெட்டிகள் வாழ்கின்றனர்.
பிற்பட்ட பகுதிகளுக்கு நடுவில் வாழும் ரெட்டிகள் நாகரீகம் குறைந்தும், தன்னந்தனியாக ஓர் ஆதிக்கப்பகுதியைக் கொண்டுள்ளவர்கள் நாகரீகமாகவும் உள்ளனர். போக்கநாடு, தேசூர்வாரு, பண்டமுதுரு, சேலி ரெட்டி என்ற வகையில் துணைப் பிரிவுகளும் உண்டு. மற்றவர்களை விட பண்ட்டரெட்டிகள் என்பவர்கள் அசல் ரெட்டிகளாக சொல்லிக்கொள்கின்றனர்.
கோவை மாவட்டத்தில் அன்னூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, பவானி, ஈரோடு தாலுகாவிலும் கொண்டா ரெட்டி என்ற பிரிவில் கம்ம, போக, பலிஜ ரெட்டிகள் வாழ்கின்றனர்.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, நாமக்கல், ஆத்தூர் தாலுக்காக்களில் முதுரு பண்டகாப்புக்களும் கொண்ட போகநாட்டு ரெட்டிகளும், ஓமலூர் தாலுகாவில் கொண்டாரெட்டி வகை சின்னக்கொம்பு ரெட்டிகளும் மேட்டூர் கொளத்தூரில் பெத்த கும்பு கொண்டா ரெட்டிகளும், பசுபுலேட்டி ரெட்ட்டிகளும் வாழ்ந்து வருகின்றனர். தர்மபுரியில் ஏரியூரில் கொண்டரெட்டிகளும் வாழ்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் தேசூர் ரெட்டி, போகநாட்டு ரெட்டி பண்டரெட்டி, கோட்லரெட்டி, பசுபுலேட்டி ரெட்டி, ஆகிய வகையான ரெட்டிகள் மாயவரம், பாபநாசம், மன்னார்குடி வைத்தீஸ்வரன் கோயில், கும்பகோணம், தஞ்சையைச் சுற்றி சுமார் 8000 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
மதுரை, சேலம், முகவைப் பகுதிகளிலிருந்து குடி போனவர்களும் உண்டு. ஏறத்தாழ, இங்குள்ள ரெட்டிகள் அனைவரும் சமமாகவே இருக்கின்றனர்.
தஞ்சை மாவட்டத்தில் பிரசித்திபெற்றது பிள்ளையார்பட்டி. இந்தியாவெங்கிலும் காண முடியாத ஏழரை அடி உயரமுள்ள இந்தப் பிள்ளையார் அழகான சலவைக்கல்லில் செதுக்கப்படது. ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெரிய கோவிலான பிரகதீசுவரர் கோவிலில் உள்ள நந்திக்குச் சமமான பிள்ளையார் ஒன்றை குடகு மலையில் தேர்ந்த சிறப்பிக்களை வைத்து செதுக்கி அதனை எடுத்துக்கொண்டு வந்த தேர் தஞ்சைக்கு மூன்று கல் தொலைவில் வல்லம் அருகில் (திருச்சி-தஞ்சை மெயின் ரோடு ) அச்சு முறிந்து பிள்ளையார் கீழே சாய்ந்து விட்டது.
விழுந்த இடத்திலிருந்து அதனை யாரும் நகர்த்த முடியவில்லை. அதே இடத்தில் அங்கு வாழ்ந்த ரெட்டி மக்கள் ஆலயம் எழுப்பி ரெட்டிப்பிள்ளையார் என்ற பெயரில் வணங்குகின்றனர். அதனை திருப்பணி செய்யும் முயற்சியில் பிள்ளையார்பட்டி தேசூர் ரெட்டிகள் இன்னும் முயல்கின்றனர்.
வட ஆர்க்காடு, செங்கல்பட்டு, சென்னை நகர பகுதிகளில் நிறைந்த வசதியுடன் ஏறத்தாழ 2000 கிராமங்களில் பண்ட்டலேத்த, பண்ட முதுரு, போகநாடு, தேசூரு, எரவாட்டி ரெட்டிலு, முசுக்கு ரெட்டிலு (பக்கநாட்டுவாரு ) கெண்டிகோட்லாவாறு , பல்லேல ரெட்டிலு இப்படி பல்வேறு ரெட்டிகளும் வாழ்கின்றனர்.
ஆந்திரத்தின் எல்லை ஓரமாக இருப்பதால் இங்கு தனி ரெட்டி கலாச்சாரத்தையும் காணமுடியும்.
"தவிடூதித் தாம் தின்ன நேரும்போதும்
தயிர்ச்சோறு பிறர்க்கூட்ட தயங்கா தீரர்"....
"தான் வருந்தி பிறர்க்குதவும் தனிப்பெருந்தகை"... ரெட்டி சமூகத்திற்கு உரியது.
ஏர்முனை என்ற ரெட்டி சமூக மாத இதழின் ஆசிரியரான சேலம், ஜி. சேதுராம ரெட்டி அவர்களால் 1965 மற்றும் 1981ல் மறுபதிப்பாக வெளியிடப்பட்ட "ரெட்டி ஜன வரலாறு" என்ற அந்நூலில் ஒரு பகுதி.
இந்நூல் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளி வந்த நூல்.
வாழ்க ரெட்டி சமுதாயம்! வளர்க்க அதன் பெருமை!
Comments
Post a Comment