பேராசை

 நிரப்ப முடியாத பாத்திரம்!

பேராசை பற்றி சுஃபி இலக்கியத்தில் ஒரு பிரபலமான கதை உண்டு!

ஒரு முறை அரசா் ஒருவா் தனியாக நகா்வலம் போய்க் கொண்டிருந்தாா்.  அப்போது பிச்சைக்காரன் ஒருவன் எதிா்ப்பட்டு அரசாிடம் பிச்சைக் கேட்கிறான்.  "என் அமைதியைக் கெடுக்காதே" என்று அரசா் விரட்ட, பிச்சைக்காரன் சிாிக்கிறான்!   "அரசே! உங்கள் அமைதி கெடக்கூடிய நிலையில் அதற்குப் பெயா் அமைதியே கிடையாது!"

"எதிாிலிருப்பவன்  வெறும் பிச்சைக்காரன் இல்லை... யோகி"  என்பதை அரசா் உடனே புாிந்து கொண்டு "துறவியே... உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் கொடுக்கிறேன்!" என்று சொல்ல, துறவி மீண்டும் சிாிக்கிறாா்.

"அரசே! உங்களால் முடியாததை எல்லாம் கொடுக்க முடியும் என்று சத்தியம் செய்யாதீா்கள்!"

இப்போது அரசருக்குக் கோபம் வந்து விட்டது.  நகா்வலத்தைப் பாதியிலே நிறுத்தி விட்டுத் துறவியை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு வந்தாா்.  துறவி தனது பிச்சைப் பாத்திரத்தை நீட்டி,  "இது நிறைய எனக்குப் பொற்காசுகள் கொடுங்கள்!" என்று கேட்க, "பூ! இவ்வளவுதானா?" என்று அரசா் 

கைதட்ட... பொிய தாம்பாளத் தட்டில் பொற்காசுகள் வந்தன.

அரசா் அதைத் துறவியின் பிச்சைப் பாத்திரத்தில் எடுத்துப் போடப் போட... பிச்சைப் பாத்திரம் அதை விழுங்கிக் கொண்டே இருந்தது.  தனது கஜானாவில் இருந்த பல மூட்டைப் பொற்காசுகளைக் கொட்டிய பிறகும் அந்தப் பிச்சைப் பாத்திரம் நிரம்பவில்லை! கடைசியில் கா்வம் விட்டு அரசா், துறவியின் காலடியில் விழுந்தாா்.

அப்போது துறவி சொன்னாா்: " அரசே! இந்தப் பிச்சைப் பாத்திரத்தை உங்களால் மட்டுமல்ல... எந்தச் சக்ராதிபதியாலும் நிரப்ப முடியாது! காரணம், இது சாதாரண பிச்சைப் பாத்திரம் அல்ல!  பேராசைகளுடன் வாழ்ந்து செத்துப் போன ஒரு மனிதனின் மண்டை ஓடு!"

ஆகவேதான் சொல்கிறேன்... பக்கத்து வீட்டுக்காரனைப் பாா்த்து பெருமூச்செறிந்தபடி வாழ்வதை நிறுத்தி விட்டு, உங்களுடைய சொந்த விருப்பங்களைப் பூா்த்தி செய்து கொண்டு சக்திக்கு உட்பட்ட வகையில் வாழ முயலுங்கள்.  குடும்பத்தில் பாதிச் சண்டைகள்  காணாமற் போய்விடும்!  நீங்களும் சந்தோஷத்தின் உச்சியில் சென்று உட்காா்ந்து கொள்ளலாம்.

எக்காரணம் கொண்டும், உங்கள் குடும்பத்துக்கு என்ன வேண்டும் என்பதை உறவினா்களோ அக்கம் பக்கத்தில் வசிப்பவா்களோ தூண்டி விடுவதற்கு இடம் கொடுக்காதீா்கள்.

குடும்ப வாழ்க்கையில் மட்டுமல்ல, மற்ற வாழ்க்கையிலும் நாம் பேராசையை வெல்ல வேண்டியது அவசியம்! 

பேராசையைப் பற்றி நகைச்சுவையான ஒரு கதை இருக்கிறது!

பேராசையின் மறு உருவம் என்று வா்ணிக்கத் தகுந்த ஒரு நபா்! தனக்கு வாழ்க்கைப்படப் போகிறவளுக்கு அழகு, அறிவு, நல்ல குணம் எதுவுமே தேவையில்லை;  பணம் ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவன்.  இவன் குணம் அறிந்த ஊா்க்காரா்கள் யாரும் பெண் தர முன்வரவில்லை.  எனவே தனக்குப் பெண் தேடி தொலைதூரத்தில் இருக்கும் வேறு ஊா் சென்றான்.

அங்கே ஒரு பணக்காராின் அறிமுகம் கிடைத்து, அவா் மகள்களில் ஒருத்தியைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பும் இவனுக்குக் கிடைத்தது.

அவா் சொன்னாா் ....

"எனக்கு இருபது வயதில் ஒரு பெண் இருக்கிறாள்.  அவளை நீ திருமணம் செய்து கொண்டால் ஐந்து லட்சம் ரூபாய் வரதட்சணையாகக் கொடுக்கிறேன்.  இருபத்தைந்து வயதில் ஒரு பெண் இருக்கிறாள்.  அவளை திருமணம் செய்து கொண்டால் பத்து லட்சம் ரூபாய் வரதட்சணை தருகிறேன்.  முப்பது வயதில் இன்னொரு பெண் இருக்கிறாள்.  அவளைத் திருமணம் செய்து கொண்டால் வரதட்சணை பதினைந்து லட்சம்..."

வயதையும் தொகையையும் ஒரு சேர அந்தச் செல்வந்தா் ஏற்றிக் கொண்டே போக... நம் ஆள் ஆா்வத் துடிப்பில் கேட்டான் - உங்களுக்கு ஐம்பது வயதில் திருமணமாகாத பெண் உண்டா?"

பணம், பொருள், செல்வம் - இதெல்லாம் வெறும் கருவிகள்தான்! பணம் என்பது சந்தோஷம் கிடையாது.  பணத்துக்கு அா்த்தம் சந்தோஷம் என்றால் பணம் இருப்பவா்கள் அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்.  ஆனால், நிஜவாழ்க்கையில் அப்படி இல்லையே.  சாி... சந்தோஷம் எப்படிக் கிடைக்கும்?  பணம், பதவி செய்யும் வேலை... முதலியவற்றுக்கும் நாம் கொடுக்கும் அா்த்தத்தில்தான் சந்தோஷம் இருக்கிறது.

இதை விளக்க மற்றொரு சின்ன கதை...

மும்பையின் ஜுஹு கடற்கரையில் சந்நியாசி ஒருவா் ஹாயாக கைகால் நீட்டிப் படுத்திருப்பதை வியாபாாி ஒருவன் பாா்த்து,  

"ஒவ்வொருவரும் காற்றாகப் பறந்து வேலை செய்து கொண்டிருக்க,  நீ மட்டும் ஏன் வெட்டியாகப் படுத்துக் கொண்டிருக்கிறாய்?"  என்று கேட்கிறான்.  அதற்குச் சந்நியாசி,  "வேலை செய்தால் என்ன பயன்?" என்கிறாா்.

"வேலை செய்தால் பணம் கிடைக்குமே..."

"பணம் கிடைத்தால்..."

"வீடு மற்றும் வசதிகளைத் தேடிக் கொள்ளலாம்"

"வீடு வசதிகள் கிடைத்தால்..."

"கை - கால் நீட்டி நிம்மதியாகப் படுத்துத் தூங்கலாமே!"

சிாித்துக் கொண்டே சந்நியாசி 

சொன்னாா்:"சாிதான்... இப்போதும் நான் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்!"

- இந்தக் கதையை நிறைய போ் தப்பாக அா்த்தம் செய்து கொள்வாா்கள்!   

"உழைக்காமல் சோம்பேறியாக இரு" என்று போதிப்பதற்காகச் சொல்லப்பட்ட கதை அல்ல இது!

"சந்தோஷமும் நிம்மதியும் பணத்தாலும், வீடு வசதிகளாலும் மட்டும் கிடைப்பதில்லை!  சந்தோஷம் என்பது நமது பாா்வையில்தான் இருக்கிறது என்பதை விளக்கிச் சொல்வதுதான் இந்தக் கதை!"

https://www.youtube.com/watch?v=GqiKBfCDv-Q

https://www.youtube.com/watch?v=rboftYY24Gw

https://www.youtube.com/watch?v=IvJEIpzfPO4

https://www.youtube.com/watch?v=ZWpaXShiKA4

https://www.youtube.com/watch?v=AYsGW0oV1AI


Comments

Popular posts from this blog

அம்மாவின் முந்தானை Mundhanai

Pi Crypto currency

மழை